புரட்டாசி மாதம் கன்னி ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், அப்பாவின் அறிவுறை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.. புதன் 2ம் தேதி முதல் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் பண வருமானம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் மனதில் நினைப்பது நிறைவேறும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும், புதிதாக நகைகள் வாங்குவீர்கள்.. சனி நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள், விவசாயம் விருத்தியடையும். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் எண்ணங்கள் நிறைவேறும். கேது ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.