புரட்டாசி மாதம் கடக ராசிகாரர்களுக்கான பலன்கள்!

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், சகோதரர்களால் நன்மை உண்டாகும்.. புதன் 2ம் தேதி முதல் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குரு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் 25ம் தேதிக்குப் பின்னர் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும், வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.. சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினை ஏற்படும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் ஏற்படும். கேது ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.