ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கும்பம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கும்பம்

வைராக்கியமும், மன வலிமையும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு பார்வை பெறுவது ஆண்டின் துவக்கத்தில் நற்பலன்களை பெற்று தரும். ராகு உங்களின் அறிவாற்றலை பெருக்குவதுடன் ஞாபக மறதி அடிக்கடி வரச் செய்வார். எதிரிகளிடமிருந்து நீங்கள் விடுபடும் வாய்ப்பையும் பெற்று திகழ்வீர்கள்.
 
இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி சுற்றான 06.03.2026 முதல்  தனஸ்தானத்தில் சனி அமர்ந்து வாழ்வில் பொருளாதாரத்தின் தன்னிறைவு  பெறும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்களின் தொடர் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்கமாட்டீர்கள். சமயத்திற்கு தகுந்தபடி உங்களின் சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள்.
 
குரு உங்களின் ராசியை பார்வை இடுவது செயல்திறனை அதிகரிக்க செய்யும். உறுதியான மனநிலையில் எதையும் செய்யும் வைராக்கியம் பெறுவீர்கள். 26.05.2026 முதல் குரு பெயர்ச்சியாகி ஆறாமிடத்தில் அமர்வது உங்களின் ராசிநாதன் சனியை பார்வை இடுவதும் உங்களின் வருமானத்தை பெருக்கி கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் தொடர்ந்து மனதில் மறுமலர்ச்சியை உருவாக்கி மேன்மை அடைவீர்கள். 13.11.2026 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி பனிரெண்டில் ராகு அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் கேது ஆறாமிடத்தில் அமர்ந்து முயற்சி ஸ்தானத்தில் பார்வை இடுவதும் தொழிலிலும், வளர்ச்சி பாதையில் செல்லும் நல்ல வாய்ப்பையும் பெறுவீர்கள். எதையும் நன்கு யோசித்து செயல்படுவீர்கள். காலத்தின் சூழ்நிலைகள் அறிந்து செயல்பட்டு வருவாயை பெருக்கி கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், வெண்மை, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, தென் கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
8, 6, 3.
 
அதிர்ஷ்ட மாதம்:
 
மார்ச், ஏப்ரல், ஜுலை, நவம்பர்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ளவும். செவ்வாய் கிழமை சுப்ரமணியரை வணங்கி நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல நன்மைகள் உண்டாகும்.