ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கடகம்
மனவலிமையும், வைராக்கியமும் கொண்ட கடக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதும், குரு, சனி, ராகு / கேதுகளின் பெயர்ச்சி இந்த ஆண்டு நிகழ்வதால் உங்களின் ராசிக்கு பல ஆண்டுகள் பட்ட கடுமையான மிக கஷ்டபட்ட நிலைமாறி வளர்ச்சி பாதைக்கு செல்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள்.
எதை செய்தால் நல்லதோ அதை மட்டும் தெரிவு செய்து பலன் பெறுவீர்கள். இதுவரையில் உங்களை ஏமாற்றி வந்தவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். உங்களின் ராசியில் குரு,, மே மாதம் முதல் அமர்வது உச்ச பலன்களை தரும் வாய்ப்பை பெறுவீர்கள். சனி பாக்கியஸ்தானத்தில் 06.03.2026 முதல் வருவது உங்களுக்கு கிடைக்க கூடிய நற்பலன்களை பெற செய்வார். நவம்பர் மாதத்தில் கேது குருவுடன் இணைவு பெறுவது மிகப்பெரிய நற்பலன்களை பெறுவீர்கள்.
தொழில் நலிந்த அன்பர்களுக்கு இனிமேல் தொழில் விருத்தியை பெற்று தரும். கடமையை சரியாக செய்து உங்களின் வாழ்க்கை சூழ்நிலையை தெறிபடுத்திக் கொள்வீர்கள். எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவீர்கள். அரசியல் வாதிகளுக்கு இது நல்ல காலமாக அமையும். இருக்கும் பதவியை தக்க வைத்து கொள்வதும் சிலருக்கு புதிய பதவியும் கிடைக்க பெறுவீர்கள். எதை சுமையாக நினைத்தீர்களோ அதன் மூலம் இனி உங்களுக்கு மேன்மையை உண்டாக்கும். ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் மகிழ்ச்சி சிறிது குறைந்தாலும் உங்களின் அரவணைக்கும் பண்பினால் எல்லாம் சரி செய்து விடுவீர்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். நம்பிக்கையுடன் வழிபட நல்லது நடக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 9.
அதிர்ஷ்ட மாதம்:
ஜனவரி, பெப்ரவரி, நவம்பர், டிசம்பர்.
பரிகாரங்கள்:
வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு புளி அன்னம் வைத்து வேண்டிக் கொள்வதும், செவ்வரளி பூ வைத்து வேண்டுவதும் சிறப்பான நல்ல பலனை பெறுவீர்கள்.

















