சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - விருச்சிகம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - விருச்சிகம்

விரும்பிய விடயங்களில் முழு ஈடுபாடு கொள்ளும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை படும் இடங்கள் சிறப்பான பலன்களை தரும். தனஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி அமர்வது அமர்வதும், கீர்த்தி ஸ்தானத்தில் சனி அமர்ந்து மனவலிமையை தருவதும், சத்ரு ஸ்தானத்தில் ராசிநாதன் அமர்வது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் உங்களின் யோகாதிபதி சந்திரன் ஆட்சி பெற்று அமர்வது உங்களின் தொழிலில் வளம் பெற செய்வார். தாமதமான திருமணம் விரைவில் நடக்கும். ஜென்ம கேது உங்களின் ஆன்மீக நாட்டத்தை ஊக்கப்படுத்துவார். ஏழாமிட ராகு உங்களின் மண வாழ்க்கை சிறக்க உதவி செய்வார். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வசதியான வாழ்க்கை வாழ உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். உங்களின் தொழில் வளர்ச்சி நீங்கள் நண்பர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

25.01.2021 திங்கள் பகல் 01.14 முதல் 27.01.2021 புதன் இரவு 10.12 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

விசாகம் 4ம் பாதம்:

மகிழ்ச்சியான வாழ்க்கையை தெரிவு செய்வீர் கள். புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். சிறந்த தொழிலதிபர்களாக உயர்வீர்கள்.

அனுசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

தொழிலாளர்களின் பணி சிறப்பாக அமையும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நல்ல பலனை பெற்றுத் தரும். குறைந்த முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்கும்.

கேட்டை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

புத்திசாலிதனமான செயல்பாடுகளால் சிலருக்கு பாராட்டு கிடைக்கும். எதிர்ப்புகளை எளிதாக வெற்றி காண்பீர்கள். கடன் சுமைகள் விரைவில் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

ஒரஞ்சு, சிவப்பு, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

செவ்வாய், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சனிகிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் அகல் தீபமிட்டு வணங்கி மஞ்சள் நிற துணி எடுத்து குருவுக்கு சாத்தி வேண்டிக் கொள்ள சகல காரியமும் மேன்மை அடையும்.