சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - துலாம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - துலாம்

வலிமையும், வளமையும் கொண்டு விளங்கும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்திலும், கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்தும், ராசியை செவ்வாய் பார்ப்பதும் தொழில் ஸ்தானத்தை குருவும், சனியும் பார்வை இடுவதும் உங்களின் வாழ்வில் தொழிலிலும், உத்தியோகத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் ஆட்சி பெற்று சுகஸ்தானத்தை பார்ப்பது உங்களின் வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள். தாயார் வழி வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். திருமண தடை பெண்களுக்கு நீங்கி வரன் அமையும் சோதனைகளை நீக்கி சாதனை புரிவீர்கள். வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கென்று மரியாதை இருக்கும். பாதியில் நின்ற காரியம் விரைவில் செயல்படதுவங்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் விரைவில் நடக்கும் சொந்த முயற்சிக்கு நல்லபலன் கிட்டும்.

சந்திராஷ்டம நாட்கள்:

22.01.2021 வெள்ளி இரவு 02.14 முதல் 25.01.2021 திங்கள்கிழமை பகல் 01.13 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:

சிந்தனையை சிதற விடாமல் செயல்படுவதில் நீங்கள் காரியவாதியாக செயல்படுவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் பெறுவீர்கள். பொருளாதார வளம் பெறுவீர்கள்.

சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

எதை தவிர்க்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அதையே செயல்பட வேண்டி இருக்கும். சில விடயங்களில் முன்னைவிட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டாகும்.

விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:

திருமண வாய்ப்பு பெண்களுக்கு அமையும் சரியான நேரத்தில் உங்களின் இலக்கை அடைவீர்கள். குறுகிய காலத்தில் தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, ஒரஞ்சு, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, வடக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வியாழக்கிழமை காலை 06-07 மணிக்குள் விநாயகரை வணங்கி தேங்காய் எண்ணெய் விளக்கு போட்டு பல வண்ண பூ வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும்.