சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - சிம்மம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - சிம்மம்

தைரியமும், விரியமும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாப ஸ்தானத்தை பார்ப்பதும் யோகாதிபதி செவ்வாய் மூன்றாமிடம், சுகஸ்தானத்தை பார்ப்பதும் குரு தனஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும். தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்வதும் உங்களின் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாடு யோகம், வெளி நாட்டு வர்த்தகம் செயலில் மேன்மை பெறுவது திறம்பட செயல்படுவதன் மூலம் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளுக்கு நல்லபலன் தரும். எதிலும் கவனமுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். பல நாள் பட்ட கஷ்டம் விலகி, நன்மை பெறுவீர்கள். தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். அரசியலில் தனி திறமையுடன் செயல்படுவீர் கள். பொருளாதாரம் சிறக்கும். உழைப்பிற்கு வருமானம் கிடைக்கும் பல மடங்கு பெருகும்.

சந்திராஷ்டம நாட்கள்:

18.01.2021 திங்கள் அதிகாலை 03.44 முதல் 20.01.2021 புதன் பகல் 02.29 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

செயல்களில் ஊக்கமுடன் செயல்படுவீர்கள். அனைத்து தடைகளையும் வென்று சாதனை படைப்பீர்கள். நல்ல தொழிலில் முன்னேற்றம். பொருளாதார வளர்ச்சியும் பெறுவீர்கள்.

பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

கலைதுறையினருக்கு நல்ல வளர்ச்சியும், புதிய கலை ஒப்பந்தங்களும் அமையும். நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். குறுகிய கால வளர்ச்சி பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

உத்திரம் 1ம் பாதம்:

அரசியலிலும், தொழிலும் சிறந்து விளங்கு வீர்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள். பொருளாதாரம் வளம் பெற்று விளங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

ஒரஞ்சு, சிவப்பு, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, வடக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

பிரதோச காலத்தில் சிவன் ஆலயம் சென்று சிவனையும், நந்தியை வணங்கி வர உங்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றமும், மேன்மையும் உண்டாகும்.