சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - ரிஷபம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - ரிஷபம்

செயலிலும், சொல்லிலும்  திறம்பட செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு மூன்றாமிட சந்திரனும், ராசிநாதன் பார்வையும், குருவின் பார்வையும் பெறுவதுடன் தொழில் ஸ்தானாதிபதி பார்வை உங்களின் லாபஸ்தானத்தை பார்ப்பதும் விரையாதிபதி செவ்வாய் விரையத்தில் ஆட்சி பெறுவதும் தொழிலிலும் உத்தியோகத்திலும் திறம்பட செயல்படுவதுடன் பொருளாதார வளமும் பெறுவீர்கள். ராசிநாதன் ராசியை பார்ப்பது கலைதுறை அன்பர்களுக்கு நல்ல வளர்ச்சியை பெற்று தரும். முக்கிய செயல்பாடுகளில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சகல பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அதிக அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் விளங்கும். குடும்ப சுமைகளிலிருந்து விடுபடுவீர்கள். கடன் கட்டுக்குள் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

11.01.2021 திங்கள் காலை 18.54 முதல் 13.01.2021 புதன் பகல் 12.58 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:

போட்டிகளை தவிர்த்து விடுவீர்கள். உங்களின் தனி திறமைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குறுகிய காலத்தில் உங்களுக்கு சேர வேண்டிய காசு வந்து சேரும்.

ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

உங்களின் பணபரிவர்த்தனைகளுக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். ஓன்லைன் வர்த்தகம் நன்றாக இருக்கும். கலைஞர்கள் பாராட்டபடு வார்கள். விளையாட்டு துறையில் வளர்ச்சி பெறுவீர்கள்.

மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:

நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். சிலர் காணி நிலம் வாங்கும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வெள்ளி, சனி, வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கும், அம்மனுக்கும் நெய் தீபமிட்டு வெள்ளை நிற பூவைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மையாய் அமையும்.