சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - மிதுனம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - மிதுனம்

மனதில் பட்டதை மறைக்காமல் வெளிபடுத்தும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு அட்டம சனியும் அட்டம குருவும் இருப்பதுடன் ராசிநாதனும் உங்களுக்கு நன்மையை செய்யும். மறைந்த புதன் நிறைந்த பலனை தருவார். பனிரெண்டிற்குரிய சுக்கிரன் ஆறில் மறைவது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’. சுக்கிரனும் நன்மை தருவார். மூன்றாமிட அதிபதி ராசியை பார்ப் பது உங்களுக்கு தைரியமும் செயலில் திடமும் அமையும் குடும்பத்தில் நல்ல செய்தியும், தனவிருத்தியும் உண்டாகும். இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அட்டம குரு, சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். தேவையற்ற பிணையம் இடுவதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. ஆலோசனைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்:

13.01.2021 புதன் பகல் 12.59 முதல் 15.01.2021 வெள்ளி இரவு 07.07 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:

போட்டிகளை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் விணையம் இடுவதை தவிர்க்கவும். மிகவும் சிரமமான காரியங்களை தவிர்த்து விடுவது நல்லது. தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

சில விடயங்களில் சாதித்து காட்டுவீர்கள். வெளிநாடு செல்ல சிறு தடை வந்தாலும், விரைவில் அதற்கான நல்ல தகவல் வந்து சேரும். தனவரவு நன்றாக இருக்கும் தொழில் சிறக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:

தங்க நகை கடன் அடையும். விரும்பிய வரன் அமையும் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் முடி வுக்கு வரும் தொழிலில் முன்னேற்றம், பொருளா தார வளமும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

பச்சை, வெண்மை, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை / ஞாயிற்றுகிழமைகளில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகு கலந்த நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றியை தரும்.