சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - மேஷம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - மேஷம்

நெஞ்சில் உயர்வையும், உடலில் தைரியமும் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆட்சி பெற்று இருப்பதும், உங்களின் தன ஸ்தானத்தை குரு பார்வை பெறுவதும் சுகஸ்தானத்தில் சந்திரன் அமர்வதும், தொழில் ஸ்தானாதிபதி சனி ஆட்சி பெறுவதும் உங்களின் செயல்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் பெற்று தரும். எதிலும் சிறந்தவராக நிகழ்வீர்கள். பணி புரியும் இடத்தில் இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகலாம். தந்தை வழி சொத்து சம்மந்தமான பேச்சு வார்த்தை நடைபெறும். குறைந்தபட்ச முதலீடு செய்யும் தொழில்கள் சிறப்பாக அமையும். தனஸ்தானத்தில் ராகு அமர்வது சிலருக்கு வாக்குஸ்தானத்தில் ஏதாவது சிக்கல் வரலாம் என்பதால் யாரிடமும் அதிகமாக பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை மேன்மை பெறும் எதையும் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்:

09.01.2021 சனிக்கிழமை அதிகாலை 06.07 முதல் 11.01.2021 திங்கள் காலை 08.53 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். எதை செய்ய வேண்டுமோ அதை மட்டும் செயல்படுத்து வீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வரவுக்கு தகுந்த செலவுகளை குறைத்து கொள்வீர்கள்.

பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

திடமான நம்பிக்கையால் பல நன்மைகளை செய்வீர்கள். உங்களுக்கு வேண்டியவர்களுக்கு உதவி செய்திட மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்களை ஊக்குவிப்பார்கள்.

கார்த்திகை 1ம் பாதம்:

அரசியலிலும், உத்தியோகத்திலும் மேன்மை அடைவீர்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

ஒரஞ்சு, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

செவ்வாய், வியாழன், சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபமிட்டு சிவப்பு நிற பூவைத்து வழிபாடு செய்து வர உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் நன்மை வந்து சேரும்.