சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - மீனம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - மீனம்

எதையும் சாதிக்க வேண்டுமென்று எண்ணும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு லாப ஸ்தானத்தில் அமர்ந்தும். லாபாதிபதி சனியுடன் இணைவு பெறுவதும் தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்வதும் உங்களின் புதிய தொழில் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். முக்கிய ஆலோசனைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கு ஒத்துழைப்பும், பொருளாதார வளமும் பெற்று திகழ்வீர்கள். ஆன்மீக ஈடுபாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு காரிய தடைகள் நீங்கி நன்மை பெறுவீர்கள். பதவி உயர்வும், பண வரவும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் முடிவுக்கு வரும். சோதனைகளை தாண்டி சாதனை செய்வீர்கள். உங்களுக்கு வரவேண்டிய தொகை சீக்கிரம் வந்து சேரும். வெளிநாடு செல்ல தடை நீங்கி பயணம் செல்வீர்கள். புத்திரர்களின் மூலம் நன்மை அடைவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

07.01.2021 வியாழன் அதிகாலை 03.49 முதல் 09.01.2021 சனி அதிகாலை 06.06 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

பூரட்டாதி 4 ம் பாதம்:

கோவில் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களுக்கு தெரிந்த விடயங்களை பலருக்கு பகிர்ந்து கொள்வீர்கள். பொருளாதாரத்தில் வரவேண்டிய தொகை வந்து சேரும்.

உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

தொழிலாளர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் உங்களின் முன்னேற்றம் சிறப்பாக அமையும். வெளிநாடு பயணம் நன்மையாக இருக்கும்.

ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

தொழிலில் உங்களின் எதிர்கால திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் வரவேண்டிய காசு வசூ லாகும். கல்வியில் முன்னேற்றம். நல்ல வேலையும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

மஞ்சள், நீலம், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, வடகிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கும், துர்க்கைக்கும் நெய் தீபம் ராகு காலத்தில் ஏற்றி உங்களின் வேண்டுதலை வைக்க விரைவில் நன்மையாக நடக்கும்.

கணித்தவர்: அருள் வாக்கு சோதிடர் திரு.ஆனந்ஜி
0091 9789341554