சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - மகரம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - மகரம்

எல்லோரிடமும் அன்பு செலுத்தும் பண்புடைய மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குருவுடன் ராசிநாதன் இணைவு பெறுவதும் பாக்கியாதிபதி புதன் இணைந்து ஏழாமிடத்தில் சந்திரனை பார்ப்பதும் உங்களின் எண்ணமும் செயலும் அனைத்து நற்பலன்களை பெற உதவி செய்வார்கள். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு மேலும் தொழிலில் மிக பெரிய நன்மைகளை செய்வார்கள். உங்களின் சுகஸ்தானாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் கடந்த கால தொழில் முன்னேற்றத்தை விட குறைந்த முதலீடுகளில் அதிக லாபம் பெறுவீர்கள். எட்டாமிட அதிபதி சூரியன் மறைவு பெறுவது ராஜயோக பலன்களை தரும். அரசியலிலும், தொழிற்சங்கத்திலும் சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

02.01.2021 சனி இரவு 08.44 முதல் 04.01.2021 திங்கள் இரவு 12.54 மணி வரையும்.

13.01.2021 சனி அதிகாலை 04.46 முதல் 01.02.2021 திங்கள் காலை 09.05 மணி வரையும்.

நட்சத்திர பலன்கள்:

உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:

அரசியலிலும், உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். குறைந்த முதலீடுகளில் தொழிலில் கூடுதல் ஆதாயம் பெற்று முன்னேறுவீர்கள். திருமண காரியம் சிறப்பாக நடக்கும்.

திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு வர பலமுறை முயற்சி செய்து கிடைக்காதவர்களுக்கு அனுமதி கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:

சோதனைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் முடிவுக்கு வரும் தொழிலில் நல்ல வளரச்சியை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

நீலம், மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, வடமேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

சனி, புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற பூவைத்து நெய் தீபமிட்டு ராகு காலத்தில் வணங்கி வேண்டிக் கொள்ள தொழிலிலும். அரசியலிலும் சிறந்து விளங்குவீர்கள்.