சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - கும்பம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - கும்பம்

எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானாதிபதி விரையத்தில் அமர்ந்து ராசிநாதனுடன் இருப்பதும். எட்டாமிட அதிபதி பனிரெண்டில் புதன் மறைவு பெறுவதும் உங்களின் வாரா கடன் வசூலாகும். கனவுகளில் இருந்து வந்த விடயங்கள் நனவாக நடந்து உங்களை மேலும் ஊக்குவிக்கும். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள் வந்து சேரும். தேக்கமாக இருந்த காரியங்கள் செயல்படதுவங்கும். சொந்த வீடு வாங்க, வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த காலம் மிகச் சிறப்பாக இடுக்கும் கடனாக வாங்கினாலும் விரைவில் கடன் தீரும். புதிய தொழிலில் முயற்சிகளுக்கு சில காலம் தள்ளி போடுவது நல்லது. உங்களின் முயற்சி நல்ல பலன் கிடைக்கும். அரசியலில் நிலையற்ற மனநிலை அமையும். எதிர்ப்புகள் குறைந்தாலும் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

04.01.2021 திங்கள் இரவு 12.55 முதல் 07.01.2021 புதன் பகல் 11.59 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:

அவசர முடிவுகளால் சிலருக்கு சங்கடங்கள் வரும். பதவி உயர்வு சில காரணங்களால் தள்ளி போகும். தொழிலில் இருப்பதை தக்க வைத்துக் கொள்வீர்கள். பணவரவு இருக்கும்.

சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

நம்பி கொடுத்த காசு வராமல் பொருளாதாரத் தில் சிரமம் கொள்வீர்கள். சுமையாக இருந்த கடன் குறையும். மிதமான தொழில் வாய்ப்பை பெற்று தன்னிறைவு பெறுவீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:

சாதகமான பதில் கிடைக்கும். வரவுக்கு தகுந்த செலவு வந்து சேமிப்பு குறையும். தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் இருக்காது. விளையாட்டில் சாதனை புரிவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

நீலம், ஒரஞ்சு, வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

சனி, ஞாயிறு, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றி வணங்கி வேண்டி கொள்ள விரைவில் வேண்டிய காரியம் விரைவில் நிறைவேறும்.