சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - கன்னி

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - கன்னி

காலத்திற்கு தகுந்தபடி செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், ராசிநாதன் லாபஸ்தானத்தை பார்பதும் உங்களின் யோகாதிபதி சனி லாபஸ்தானத்தையும், தனஸ்தானத்தையும் பார்ப்பது தொழிலிலும், பணியிலும் சிறந்து விளங்கி பொருளாதார நன்மைகளை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கு நல்ல வளமான எதிர்கால பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சியும். தனி திறன் கொண்டு செயல்படும் வாய்ப்பையும் பெறுவீர்கள். குறுகிய காலத்தில் பொருளாதாரததில் வளர்ச்சியை பெறுவீர்கள். லாபஸ்தானத்தில் லாபாதிபதி சந்திரன் அமர்வதும் வளம் பெற செய்யும். அரசியலிலும் நல்ல பேச்சாளராக வருவீர்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். ராசிநாதன் உங்களின் செயல்களுக்கு நல்ல ஊக்கம் தந்து வளர்ச்சியை தருவார்.

சந்திராஷ்டம நாட்கள்:

20.01.2021 புதன் பகல் 02.30 முதல் 02.02.2021 வெள்ளி இரவு 02.13 வரை.

நட்சத்திர பலன்கள்:

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:

தொழிலில் தனக்கு என்ன திறன் இருக்கிறதோ அதை வைத்து திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள். நல்ல செயல்களில் ஊக்கம் கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

அஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

பகைவனை கூட உறவாடி இணைத்துக் கொள்வீர்கள். உரிய நேரத்தில் செயல்பட்டு திறனை வெளிபடுத்தி வளம் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உங்களின் பங்கு சிறப்பாக அமையும். விரும்பிய வாழ்க்கை அமையும். விளையாட்டு துறையில் வளர்ச்சியை பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி இலுப்பெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் தொடர் காரியங்களில் மென்மேலும் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் காண்பீர்கள்.