சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - கடகம்

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - கடகம்

மனவலிமையுடன் எதையும் செய்ய துணியும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு, சனி பார்வை பெறுவதும் யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதும் உங்களின் பல காரியங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். சரியான கோணத்தில் சென்று எதையும் செயல்படுத்திக் காட்டுவீர்கள். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உறவும், நட்பும் பக்க பலமாக அமையும். ராசிநாதன் ஆட்சி பெற்று இருப்பது உங்களுக்கு மன தைரியத்தை கொடுக்கும் தொழிலில் ஸ்தானதிபதியே ஆட்சி பெற்று இருப்பதால் இன்னும் பல நன்மைகள் வந்து சேரும். முக்கிய நபர்களின் சந்திப்பு உங்களின் நல்வழியில் தந்து பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்று தரும். கணவன் மனைவி உறவு நல்ல புரிதலுடன் தொடரும். அரசியலில் இருப்பவருக்கு நல்ல பதவியும். மரியாதையும் பெற்று தரும்.

சந்திராஷ்டம நாட்கள்:

15.01.2021 வெள்ளி இரவு 07.08 முதல் 18.01.2021 திங்கள் அதிகாலை 03.43 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

புனர்பூசம் 4ம் பாதம்:

நல்ல விடயங்களுக்கு உதவி செய்வீர்கள். படித்த கல்விக்கு தகுந்த வேலை வாய்ப்பு அமையும். தொழிலிலும், உத்தியோகத் திலும் சிறந்து விளங்கி நற்பெயர் பெறுவீர்கள்.

பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

குடும்பத்தில் சிறு சச்சரவு வந்தாலும் உங்களின் தலையீடு நன்மை தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வீர்கள்.

ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விடயத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கொண்டும் சிறப்பாக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, தெற்கு, தென்கிழக்கு 

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், வியாழன், சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

திங்கள்கிழமைகளில் சிவன் ஆலயம் சென்று சிவனை வணங்கி நெய் தீபம் இரண்டு ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்ல, எல்லாம் நினைத்தபடி சிறப்பாக அமையும்.