சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள் 01.01.2021 முதல் 31.01.2021 வரை - தனுசு

சார்வரி ஆண்டு ஜனவரி மாத ராசி பலன்கள்  01.01.2021 முதல் 31.01.2021 வரை - தனுசு

தைரியமுடன் செயல்களை செய்து சாதிக்கும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சூரியன் ராசியிலும், தனஸ்தானத்தில் ராசிநாதனுடன் தனகாரகனான சனியும் இணைந்து தொழில் ஸ்தானாதிபதி பலம் பெறுவது தொழிலில் வளம் பெற வாய்ப்பு அமையும். உங்களின் ராசி ஜென்ம சனி விலகி, பாத சனி வந்தாலும் உங்களின் தனகாரகன் சனி என்பதால் சிறந்த பலனாக அமையும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பு அமையும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்கும். தொழிலிலும், உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் செயல் படுவதன் மூலம் யோக பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொள் வீர்கள். பஞ்சமாதிபதி செவ்வாய் காணி நிலம் வாங்கும் வாய்ப்பை ஒரு சிலருக்கு அமைத்து தருவார்.

சந்திராஷ்டம நாட்கள்:

27.01.2021 புதன் இரவு 10.13 முதல் 30.01.2021 சனி அதிகாலை 04.45 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

சாதிக்க நினைத்ததை செயல்படுத்துவீர்கள். பெரிய காரியங்களில் ஈடுபாடுகளை கொண்டு செயல்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு துறையில் சாதித்து காட்டுவீர்கள்.

பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

கலைதுறையினரின் ஆடம்பர வாழ்க்கைக்கு உரிய காசு கிடைக்கும். தொழிலில் குறித்த நேரத்தில் விநியோகித்து வாடிக்கையாளர்களை ஊக்கபடுத்தி வளம் பெறுவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:

தொழிலிலும், உத்தியோத்திலும் செல்வாக்கு பெற்று திகழ்வீர்கள். எதிலும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

மஞ்சள், நீலம், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு எள் கலந்த அன்னம் வைத்து பறவைக்கு கொடுத்து வர நீங்கள் நினைத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும்.