சொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு?
யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது சொந்தமாக வீடு கட்டும் யோகம் கிட்டும். ஜோதிடத்தில் சுக்கிரனை கட்டிடக்காரகன் என்றும், 4வது வீட்டை கட்டிட ஸ்தானம் என்றும் கூறுவர்.
பொதுவாக 4ஆம் அதிபதியின் தசை, புக்தி அல்லது சுக்கிரன் வலுவாக இருந்து அதன் தசை, புக்தி நடக்கும் காலகட்டங்கள் மற்றும் யோகாதிபதி, ஜீவாதிபதி, லக்னாதிபதியின் தசா புக்திகள் நன்றாக இருக்கும் காலகட்டத்தில் வீடு கட்டுவதற்கான வாய்ப்பு, வசதி, வருமானம் கிட்டும்.
இதுமட்டுமின்றி பூமிக்காரகன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது. பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.