தேவையற்ற சாமான்களை நீக்கல்
தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வீட்டின் எல்லா இடங்களிலும் அடைத்து வைக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. அவர்கள் இப்பொருட்களை உபயோகிப்பதும் இல்லை. துக்கி எறிவதுமில்லை. தேவையில்லாத பொருட்களே கூளங்கள் (clutter) ஆகும்.
உதாரணம் : மறுபடியும் ஃபாஷனுக்கு வரலாம் என நீங்கள் சேர்த்து வைக்கும் துணிமணிகள், ஆடைகள்; உங்களுக்குக் கிடைத்த விலை யுயர்ந்த பரிசுகள்; செயற்கை இழைகளால் நெய்யப்பட்ட உங்களுக்கு பிடித்தமில்லாத துணி... இப்படிப் பல. இவற்றைச் சில காரணங்களுக் காக நீங்கள் அணியாமல் இருந்தாலும் துக்கிப் போடுவதில்லை.
பழைய பேப்பர், பத்திரிகைகள், செய்தித்தாள்களிலிருந்து வெட்டி எடுத்திருக்கும் குறிப்புகள், என்றாவது ஒருநாள் உபயோகப்படும் என்று சேகரித்து வைத்திருக்கும் பழைய புத்தகங்கள். பார்க்கப்போனால் ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். நீங்கள் ஒருதடவைகூட அவற்றைப் படித்தோ உபயோகித்தோ இருக்கமாட்டீர்கள்.
விரிசல் விழுந்த உடைந்த காட்சிப் பொருட்கள்.
பழைய வீடியோ, ஆடியோ கேஸட்டுகள் (ஒலி, ஒளி நாடாக்கள்).
வேலை செய்யாத பழைய சாதனங்கள்.
பழுதாகிவிட்ட கை, சுவர்க் கடிகாரங்கள்.
பழைய செய்தித் தாள்கள்.
15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கணக்கு வழக்குகள் மற்றும் குறிப்பேடுகள்.
மனதளவில் அடைசல் கடந்த கால உணர்ச்சிமயமான, வேதனை, அதிர்ச்சி தந்த நினைவுகள்.
முன்னேற நினைத்தால், இம் மாதிரியான எல்லா கூளங்களையும் களைந்து அகற்றி விடவும். குப்பை கூளங்கள் மனிதர் களைப்பின்னே இழுக்கின்றன. ஒவ்வொரு உபயோகமற்ற பொருளும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நுலால் கட்டி உங்களுடைய முன்னேற்றத்தைத் தடுக் கிறது. இப்படிச் சேர்த்து வைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் கணினி கம்ப்யூட்டர் மெமரியில் இருக்கும் மெகா பைட் (Megabyte) போல உங்கள் மூளையில் ஓர் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். மூளையில் குறிப்பிட்ட அளவுதான் இடமிருக் கிறது. அதைக் குப்பையால் அடைக்க வேண்டாம். எல்லா விதமான வெளிப்புறக் குப்பைகள், மனக்குழப்பங்கள், எல்லாவற்றையும் எடுத்தெறிந்து விட்டுப் பாருங்கள். நீங்கள் எத்தனை சுதந்திரமாக, சுகமாக, சந்தோஷமாக உணர்கிறீர்கள் என்பதை. ஒரு யோகி எப்படி ஆன்மீக முன் னேற்றத்திற்காக சமூக பந்தங்களை விட்டு விடுகிறாரோ, அதேபோல நீங்கள் தேவைக்கு அதிகமான, உடல் சார்ந்த உடைமைப் பொருட் களை வாழ்க்கையின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்காகக் களைந்துவிட வேண்டும். குப்பை கூளங்களைக் களைந்த பின் நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு காரியம் வாசனை ஊது பத்திகளை தினமும் ஏற்றிவைப்பது. இதனால் இடம் மாசு ஒழிக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். பூசைக்குப் பின், விருப்பமிருந்தால் வீடு முழுவதும் மணியோசை எழுப்பலாம்.