தியானமுறைகள் - ஆரம்ப தியானிகளுக்கு

தியானமுறைகள் - ஆரம்ப தியானிகளுக்கு

ஆரம்ப தியானிகள் முடிவுநிலை தியானிகள் என்று இரண்டு நிலை எதுவும் இல்லை. முக்தி அடைதல் ஒன்றுதான் இறுதி நிலை. மற்றபடி அனைவரும் ஆரம்ப சாதகர்களே. நம் மனோ நிலையால் தியானத்தில் படி நிலைகள் இருப்பதாக உணர்கிறோம், ஆரம்பத்தில் தியானம் செய்யும் போது அமைதியாக தியானத்தில் அமரமுடியாது. இன்று, நாளை, கடந்தகாலம் என்று நாம் செய்யவேண்டிய வேலைகளின் எண்ணங்கள் நம்மை வந்து அடைந்து அமைதியாக அமரமுடியாமல் செய்துவிடும். இங்கேதான் ஓஷோவின் தியான முறைகள் நம்மை பக்குவப்படுத்தி மேல் நிலைக்கு அழைத்து செல்லுகிறது. ஆரம்ப சாதகர்கள் தேவையானது.

1) ஓஷோவின் “தியானம், 60 தியான முறைகள் ,விளக்கங்கள்”, புத்தகத்தில் உள்ள தியான செய்முறைகளை படித்து பார்த்து அதன்படி நமது தியானத்தை தொடங்கலாம்.

2) இந்தவலை தளத்தில் ஓஷோவின் தியானமுறைகளை அறியலாம். www.osho world.com

3) “ஓஷோ கேம்ப் “கலந்துக்கொள்ள இருப்பவர்கள் கட்டாயமாக “தியானம் “புத்தகத்தை படித்துவிட்டு செல்லவும் . இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓஷோ நண்பர்களுக்கும் உங்களுக்கும் இடைவெளியை குறைக்கும் . முழுமையாக தியானத்தில் ஈடு படுத்திக்கொள்ளலாம்.

4) ஓஷோ தியானத்தின் தனி சிறப்பு இசை உடன் சேர்ந்து தியான பயிற்சி செய்வது. உங்களுக்கு தேவையான தியான CD க்களை வாங்கி பயன் படுத்தவும்.