நல்லுறவு நீடிக்க மகிழ்ச்சிகரமான குடும்ப புகைப்படம்
குடும்பத்தில் ஒற்றுமை உணர்ச்சியை ஏற்படுத்த மிகச் சிறந்த வழி கூடத்தின் தென் மேற்கு மூலையில் பெரிய குடும்ப புகைப்படத்தை மாட்டுவதுதான். அந்தப்படத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொவருவரும் இருக்க வேண்டும். அதுவும் சிரித்த முகத்துடன்.
இந்திய கூட்டுக் குடும்ப முறையில், மாமியார் மருமகள் உரசல்கள் பொதுவாக நேர்வதால், இம் மாதிரி படம் மாட்டுவது மிகவும் பயனளிக்கும். மாமியாரும், மருமகளும் சிரித்தவாறு இணைந்து இருக்கும் படத்தை மாட்டினால் அவர்கள் உறவு பலப்படும்.
திருமணமான தம்பதி இருவரும் காதலுடன் இணைந்த மகிழ்ச்சிகரமான புகைப்படத்தை படுக்கையறையின் தென்மேற்கு மூலையில் மாட்டினால், அவர்களின் அன்பும் காதலும் பெருகும்.