உடலுக்கு நன்மையைத்தரும் தியானம்
ஒரு உயிரின் அனைத்துச் செயலுக்கும் மனம் தான் அடிப்படை. விதைக்குள் ஒழிந்திருக்கும் துளிர், இலை, கிளை, பூ, பிஞ்சு, காய், சுவை, மணம், நிறம் போன்று மனிதனுக்குள் அவன் மனதிற்குள் ஆச்சரியமான, அபரிவிதமான சக்தி அடங்கிக் கிடக்கிறது. இவற்றை முழுமையாக அறிந்து முறைப்படி வெளிப்படுத்துவதே தியானத்தின் முதல் படியாகும்.
அதிகாலையில் 5மணியும் மாலைவேளையில் 6-7மணியும் தியானம் செய்வதற்கு சரியான நேரமாகும். தூய்மையான அமைதியான இடம் தியானம் செய்வதற்கு அவசியமாகும். தியானத்தின் ஆரம்ப நிலையில் பல வகையான தடங்கல்களும், சிரமங்களும் வரத்தான் செய்யும். இதைக்கடந்து தான் முன்னேற வேண்டும்.
தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி பொறுமைதான். தியானத்தின் ஆரம்பத்தில் மனம் அலைபாயும். பொறுமைபறந்து போகும். ஆனாலும் போகப் போக அது நன்மை பயக்கும். இவ்வாறு கூறுகிறது யோகாசனம் தொடர்பான மருத்துவ ஆய்வு ஒன்று.