வைகாசி மாதம் விருச்சிக ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் விருச்சிக ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

ஒரு முடிவை எடுத்த பின்பு அதனை மாற்றி கொள்ளாத மனம் கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனும் இணைந்து பார்வை இடுவதும், சந்திரன் தனஸ்தானத்தில் அமர்வதும் பொருளாதாரத்தில் தொடர்ந்து வருமானம் கிடைக்கப்பெறுவீர்கள். மனம் போல் வாழ்வு அமையும்.

பணியாளர்களுக்கு

பணி சுமைகளை குறைத்து கொள்வீர்கள். பணியில் சிலருக்கு மாறுதல் வரலாம். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பீர்கள். தன்னையும், தன்னை சார்ந்த தொழிலாளர் களுக்கு உதவியாக இருந்து தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை சீரான முறையில் செய்திடுவீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது நலனில் சொந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்க நினைப்பீர்கள். உதவி செய்வதாக இருந்தாலும் உங்களை மதித்து நடப்பவருக்கு பக்கபலமாக இருந்து நன்மைகளை செய்வீர்கள். எதிர்கருத்துகளை சொல்ல தயங்க மாட்டீர்கள். பொது சொத்தை பாதுகாத்து கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு

தொழில் ஸ்தானாதிபதி பார்வை ராசிக்கு இருப்பது உங்களின் தொழிலில் நிறைவான பலனை தரும். செய்யும் தொழிலில் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். விடுதிகள், எரிபொருட்கள் விற்பனை நல்ல லாபம் பெற்று தரும். வியாபாரிகளின் கூட்டு நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டு வளர்ச்சியை பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைதுறையினர் நெருக்கமான தொடர்பு களையும் செயல்பாடுகளையும் ஊக்கப்படுத்தி கொள்வீர்கள். நிர்வாகம், இயக்குனர், எலக்ட்ரிக்கல் டிசைனிங் போன்ற கலைஞர்களுக்கு வாழ்வில் வளம் பெறுவீர்கள். ஒப்பனை கலைஞர்களுக்கு பாராட்டுதல்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறக்கும்.

பெண்களுக்கு

பெண்களின் சொந்த கருத்துகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும். சுயதொழிலில் கூடுதல் வளர்ச்சியையும், வருமானத்தையும் பெறுவீர்கள். விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவீர்கள்.

மாணவர்களுக்கு

உயர்கல்வியிலும், தொழில் நுட்ப கல்வியிலும் சிறந்து விளங்குவீர்கள். சட்டம், காவல், ராணுவம் கல்வியில் முன்னெற்றம் பெறுவீர்கள்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

27.05.2017 சனி காலை 10.25 முதல் 29.05.2017 திங்கள் பகல் 01.07 மணி வரை.

நட்சத்திர பலன்கள்

விசாகம் 4ம் பாதம்

மருத்துவ செலவுகள் குறையும். தொழிலில் நினைத்த காரியத்தை சீக்கிரம் முடித்துக் கொள்வீர்கள். தொழிற்சங்க விடயங்களில் திறமை வளர்த்துக் கொள்வீர்கள்.

அனுசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

தொழிலாளர்களுக்கு உதவி செய்வதை கடமை யாக நினைப்பீர்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டீர்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கேட்டை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

செய்யும் தொழிலில் உங்களுக்கு பிடித்தபடி இருந்தால் மட்டுமே செய்வீர்கள். பிடிக்காவிட்டால் விட்டு விடுவீர்கள். சமயத்தில் உங்களின் காரியம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரஞ்சு, சிவப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், ஞாயிறு, வெள்ளி

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

வியாழக்கிழமைகளில் சிவன் கோவில் சென்று தட்சிணாமூர்த்தி வணங்கி நெய்தீபம் போட்டு வணங்கிவர காரிய தடை நீங்கி நன்மை பெறுவீர்கள்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3