வைகாசி மாதம் சிம்ம ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் சிம்ம ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

எதையும் விட்டு கொடுக்காமல் செயலில் திறம்பட செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ராசிநாதனும் யோகாதிபதியும் அமர்ந்திருப்பதும் தனஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது கிடைக்க வேண்டிய சகல பாக்கியமும் எளிமையாக கிடைக்க பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

பணியாளர்களுக்கு

திறமைகளை வளர்த்து கொண்டு செயல்படும் நீங்கள் தொழிற்சங்க பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு தொழிலாளர் அன்பை பெறுவீர்கள். எந்த இடத்திலும் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சொன்னபடி செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வளம் பெற உதவியாக இருப்பீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது விடயங்களில் மிகவும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். பிறருக்கு உதவி செய்வதையும் பிறர் நலன் காப்பதிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது எல்லோரின் நலன் பார்ப்பதில் நீங்கள் எடுக்கும் முடிவு சாகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு

தொழிலில் சுபகாரியத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்கள் பாத்திரங்கள், ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்பைவிட கவனம் செலுத்தி விற்பனையை அதிகரித்து கொள்வீர்கள். 

கலைஞர்களுக்கு

கலைதுறையினர் குறித்த காலத்தில் ஒப்பந்தப்படி நிகழ்ச்சியை திறம்பட நடத்தி கொடுப்பீர்கள். சாகச கலையில் முக்கிய இடம் பிடிப்பீர்கள். கலைஞர்களின் நலனில் வேண்டிய உதவிகளை செய்து வருவீர்கள். 

பெண்களுக்கு

பெண்களில் சிலருக்கு திருமண வாய்ப்புகள் அமையும். விரும்பிய வாழ்க்கை அமையும். எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். சுயதொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். பண புழக்கம் இருக்கும்.

மாணவர்களுக்கு

சட்டம், அரசியல், விளையாட்டுத்துறை கல்வி மேன்மை பெறுவீர்கள். ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

20.05.2017 சனி இரவு 12.53 முதல் 23.05.2017 செவ்வாய் அதிகாலை 05.11 மணி வரை

நட்சத்திர பலன்கள்

மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

தொழிலில் முன்னேற்றமும், தொழிலாளர்களின் பணியிடங்களில் முக்கியத்துவமான பொறுப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் விரைவில் நடக்கும். 

பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும். கலைஞர் களின்வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பண புழக்கம் உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதங்கள்

தொழிலில் கடந்த காலம் பட்ட கஷ்டம் விலகும். உங்களை ஏமாற்றி வந்தவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். திறமையான நிர்வாகியாக திகழ்வீர்கள். 

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஒரஞ்சு, தென்மேற்கு

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், சனி

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை பைரவர் வழிபாடும், காளி துர்க்கை வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு ஏழைக்கு மருத்துவ உதவி செய்துவர எல்லாம் நன்மையும் உண்டாகும்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3