வைகாசி மாதம் மிதுன ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் மிதுன ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

முடிவுகளை உடனே தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வம் கொள்ளும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு சந்திரன் பார்வை பெறுவதும் ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்வதும் சாதகமான சூழ்நிலையை தரும். ஆறாமிடத்தில் சனி அமர்ந்து கடன், நோயிலிருந்து விடுதலையை பெற்று தருவார்.

பணியாளர்களுக்கு

தொழிலாளர்களின் பணி சிறக்கும். விவசாயம், தோட்ட தொழிலாளர்களின் பணியின் மாற்றங்கள் உண்டாகும். தொழிலாளர்களின் நலனிற்கு உதவியாக இருப்பீர்கள். நிலம் தொடர்பான முக்கிய ஆராய்ச்சியில் வெற்றியை பெறுவீர்கள். தொழிலாளர்களின் மருத்துவ வசதிகளை பெறுவீர்கள். 

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

உங்களை மதித்து அழைப்பவர்களுக்கு உடன் இருந்து வேண்டிய உதவிகளை செய்வீர் கள். மதிக்காதவர்களைத் திரும்பி பார்க்க மாட்டீர்கள். பொது கருத்தை தெரிவிக்கும் போது வேறு யார் மனதும் புண்படாதபடி பேசுவீர் கள். திறமையான செயல்பாடுகள் மூலம் உங்களின் வலிமையை நிரூபித்து காட்டுவீர்கள். 

வியாபாரிகளுக்கு

கடல் சார்ந்த பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். தொழிலில் முன்பைவிட சிறப்பாக செயல்பட்டு வியாபார வளர்ச்சியை காண்பீர்கள். வர வேண்டிய தொகை விரைவில் வந்து சேரும். கடல் சார்ந்த பயணம் பயனுள்ளதாக அமையும். விவசாய விளை பொருட்கள் மூலம் கூடுதல் ஆதாயம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு

கலைதுறையினர் முன்னேற்றம் பெறுவீர்கள். வசனம், பாடல், நிர்வாகத் திறமை கொண்டு கலைதுறையினர் வளர்ச்சி சிறப்பாக அமையும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சக கலைஞர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நடன இசை கலைஞர்களுக்கு பாராட்டுதல்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு

தங்களின் சுயதொழிலில் முன்னேறி வளர்ச் சியை பெறுவீர்கள். வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு விரைவில் அமையும். ஆடம்பர பொருட்கள் விற்பனையில் கூடுதல் ஆதாயம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

சிறந்த கல்வியாளராக விளங்குவீர்கள். பிடித்த விடயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரம், கணிதம், சட்டம், விவ சாய கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

12.06.2017 திங்கள் மாலை 04.58 முதல் 14.06.2017 புதன் இரவு 02.06 மணி வரை

நட்சத்திர பலன்கள்

மிருகசீரிடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

விளையாட்டு துறையில் ஆர்வம் உண்டாகும். குறித்த இலக்கை அடைய நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும். தொழிலில் முன்னேற்றம் உண் டாகும்.

திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

குடும்பத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மறையும். தேவையற்ற பய உணர்வு விலகும். தொழிலாளர்களின் இடமாற்றம் வாழ்வில் வளம் பெற்று தரும்.

புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்

உடல் நலமில்லாமல் இருந்து வந்தவர்களுக்கு உடல் நலன் தேறும். குடும்ப ஒற்றுமை சிறக்கும். தொழிலில் முன்பைவிட நன்மையான பலன்கள் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நீலம், வெண்மை

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், திங்கள், வியாழன்

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

காவல் தெய்வங்களையும், உக்கிர தேவதை களையும் சனிக்கிழமைகளில் வணங்கி வர தடைகள் நீங்கி மரண பயம் பில்லி சூனியம் பயம் நீங்கும். தொழிலில் மேலும் விருத்தியை அடைவீர்கள்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3