வைகாசி மாதம் மீன ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் மீன ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை... கடமைகளை உணர்ந்து அதற்கு தகுந்தபடி நடந்து கொள்ளும் மீன ராசி வாசகர்களே! இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் தொழிலிலும், பணி புரியுமிடத்திலும் வளர்ச்சியும், எழுச்சியும் பெறுவீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனை பெற்று தரும்.

பணியாளர்களுக்கு

பணியாளர்களின் கூட்டு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பை தருவீர்கள். எதிலும் சொந்த கருத்துகளை பற்றி கொள்ள நினைத்தாலும் பிறரின் மனம் புண்படாதபடி அதனை வெளி படுத்தாமல் அமைதியாய் இருந்து விடுவீர்கள். பணியில் கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுப்பீர்கள். 

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது நலனின் சிறப்பாக பணி புரிவீர்கள். விட்டு கொடுத்தால் கெட்டு விடுவதில்லை என்பதை உதாரணமாக கொண்டு விளங்குவீர்கள். பிறருக்கு உதவி செய்வதை கடமையாக கொள்வீர்கள். பொது கருத்திற்கு உடனிருந்து ஒத்துழைப்பு தருவீர்கள். 

வியாபாரிகளுக்கு

உங்களின் ராசிநாதனை தொழில் ஸ்தானாதி பதியாக அமைவது ராசிநாதனின் பார்வை பெறுவது. உங்களின் தொழில் வளர்ச்சிக்கு பக்க பலமாக அமையும். மீன் இறைச்சி, தங்கநகை, எழுது பொருட்கள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும்.  பொருளாதாரத்தில் வளர்ச்சி கிட்டும். 

கலைஞர்களுக்கு

கலைதுறையினர் நிகழ்ச்சிகளில் சிறந்த மாற்றங் களை செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று புகழ் அடைவீர்கள். இசை, நாட்டியம், நடிப்பில் துறையில் சிறந்து விளங்குவீர்கள். பொருளாதாரம் நன்மை தரும். 

பெண்களுக்கு

பெண்களின் உறுதியான நிலைகளிலிருந்து மாறாமல் இருப்பீர்கள். ஆன்மீக செயல்களில் சிறந்து விளங்குவீர்கள். புதிய கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். 

மாணவர்களுக்கு

ஆன்மீகம், ஜோதிடம், இசைக்கல்விகளில் சிறந்து விளங்குவீர்கள். சகமாணவர்களின் கல்விக்கு உதவியாக இருப்பீர்கள். ஆசிரியர் உதவி நன்மை தரும்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

05.06.2017 திங்கள் காலை 07.29 முதல் 07.06.2017 புதன் மாலை 06.07 மணி வரை

நட்சத்திர பலன்கள்

பூரட்டாதி 4ம் பாதம்

தெய்வபக்தியில் சிறந்து விளங்குவீர்கள். ஆன்மீக செயல் களுக்கு உதவியாக இருப்பீர்கள். மிருகங்கள் மீது பாசம் கொண்டு விளங்குவீர்கள்.

உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

செயலிலும், கடமையிலும் தவறாமல் செய்து வரும் நீங்கள் முதலீடுகளிலும் சரியான கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைவீர்கள். 

ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

முயற்சிகளில் தொடர்ந்து இருந்து வரும் நீங்கள் முடிவ வரை செயலில் இருப்பீர்கள். கருத்துகளில் ஒற்றுமை இருக்க வேண்டி எல்லோரையும் அனு சரித்து செல்வீர்கள். 

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, சிவப்பு

அதிர்ஷ்ட திசைகள் : வடக்கு, வடகிழக்கு, மேற்கு

அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், புதன், திங்கள்

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமையும், திங்கள் கிழமையும் ஆஞ்சநேயர் வழிபாடும், வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு பயனுள்ள தொழில் வளத்தையும், முன்னேற்றத்தையும் தரும். பொருளாதாரத்தில் வளம் பெறுவீர்கள்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3