வைகாசி மாதம் மகர ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!
காலத்திற்கு தகுந்தபடி உங்களை மாற்றிக் கொண்டு செயல்படும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், சாதகமான கிரக அமைப்புகளால் பல வழிகளில் நன்மையும் பெறுவீர்கள். தொழிலும், பணிபுரியுமிடத்தில் உங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து கொள்வீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
பணியாளர்களுக்கு
பணியில் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். எந்த முடிவையும் துணிச்சலுடன் எடுத்து தொழிலாளர்களின் அன்பை பெறுவீர்கள். விவசாயம். மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றங்களும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும் உண்டாகும். சுபகாரிய முயற்சி நல்ல பலனை தரும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு
பொது விடயங்களில் பிறருக்கு உதவி செய்வதிலும் உடன் இருந்து செயல்படுவதிலும் ஆர்வமாக செயல்படுவீர்கள். அரசாங்க உதவிகளையும். அரசியல்வாதிகளின் ஆதரவையும் மக்களுக்கு பெற்று தருவீர்கள். தனித் திறமையை வளர்தது கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு
உங்களின் தொழில் ஸ்தானாதிபதி பலம் பெற்று இருப்பதும் தொழிலில் ஆற்றலையும் புதிய யுக்திகளையும் தந்து வெற்றி பாதையை நோக்கி உங்களை அழைத்து செல்வார்கள். எதிலும் கவனமுடன் செயல்பட்டு உங்களின் விற்பனையை அதிகரித்துக் கொள்வீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைதுறையினரின் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும், சொகுசான வாழ்வையும் விரும்புவீர்கள். நாட்டியம். கிராமக்கலைகளில் சிறந்து விளங்குவீர்கள். கலைஞர்களின் வளர்ச்சிக்கு உதவிகளை செய்து தருவீர்கள்.
பெண்களுக்கு
பெண்களின் சுபகாரியம் திருமண வாய்ப்பு குழந்தை பாக்கியம் போன்றவற்றில் வளர்ச்சி கிட்டும். கணவன் மனைவி உறவு பலப்படும். எதிலும் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
மாணவர்களுக்கு
மாணவர்களின் உயர்கல்வியில் வளர்ச்சி தரும். அரசியல், சட்டம், கணணி தொழில்நுட்ப கல்வி கூடுதல் பலம் பெற்று தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்
31.05.2017 புதன் மாலை 05.05 முதல் 02.06.2017 வெள்ளி இரவு 11.01 மணி வரை
நட்சத்திர பலன்கள்
உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்
தொழிற்சங்க பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். உறுதியான செயல்பாடுகளில் திறமையுடன் செயல்படுவீர்கள்.
திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்
தொழிலில் விரைவான வளர்ச்சியை பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சிறப்பான பதவியை பெறுவீர்கள். சமூகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்
கட்டுமான தொழிலில் வளர்ச்சியை பெறுவீர் கள். திட்டமிட்ட காரியம் தடையின்றி நடக்கும். விரும்பிய வாழ்க்கை அமையும். கலைஞர்கள் வளர்ச்சியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கருப்பு. மஞ்சள்
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி, வியாழன்
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை சாய் பாபாவை வணங்கி வரவும். சிவன் கோவில் சென்று நந்திக்கு விளக்கு போட்டு வணங்கிவர தடைகளிலிருந்து விடுதலை பெற்று வளர்ச்சியை அடைவீர்கள்.