வைகாசி மாதம் கும்ப ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் கும்ப ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை... யாருக்காகவும் நீங்கள் எடுத்த முடிவுகளை மாற்றி கொள்ளாத கும்ப ராசி வாசகர்களே! இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் யோகாதிபதி உச்சம் பெற்று அமர்வதும் ராகுவின் பார்வை பெறுவதும் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். லாபஸ்தானத்தில் சந்திரன் அமர்வது யாருடைய பணமாவது உங்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.

பணியாளர்களுக்கு

கூடுதல் பணி செய்து விடாமல் உழைத்து உடல் நலனில் பாதிப்பை தந்த நிலை மாறி இனி இதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். தொழிற்சங்கத்தின் முக்கிய பதவி கிடைக்கும். எதிலும் வெற்றியை பெறுவீர்கள். 

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது நலனில் கவனம் செலுத்தி வரும் நீங்கள் மற்றவருக்கு உதவி செய்வதை விருப்பமுடன் செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தொழில்சார்ந்த உதவிகளை பிறருக்கு பெற்று தருவீர்கள். வங்கிகளின் தொடர்பு பயனுள்ளதாக அமையும். 

வியாபாரிகளுக்கு

உங்களின் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் வக்கிரம் அடைவதால் தொழிலில் முன்பைவிட சிறப்பாக வளர்ச்சியை பெற வாய்ப்புகள் அமையும். விளையாட்டு சாமான்கள், விவசாய இடுபொருட்கள், மீன் விற்பனை மூலம் அதிக லாபம் பெறுவீர்கள். 

கலைஞர்களுக்கு

கலைஞர்களின் வாழ்வில் வளம் பெறும் காலமாக இனி அமையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நடனம், ஆடல் பாடல்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் எல்லோரையும் அசர வைப்பீர்கள். இரவு நிகழ்ச்சி மூலம் வெற்றியை பெறுவீர்கள். 

பெண்களுக்கு

பெண்களுக்கு கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும். முதலீடு இல்லாத தொழிலில் கூடுதல் ஆதாயம் கிட்டும். சுயதொழில் சிறக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.

மாணவர்களுக்கு

சட்டம், வங்கி, ஆயுள் காப்பீடு சார்ந்த கல்வி நன்றாக வளர்ச்சியை தரும். மருத்துவ கல்வி மேன்மை தரும்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

02.06.2017 வெள்ளி இரவு 11.02 முதல் 05.06.2017 திங்கள் காலை 07.28 மணி வரை

நட்சத்திர  பலன்கள்

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்

சொந்த தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் ஆதாயம் கிட்டும். லொத்தரில் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். 

சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

வெளிநாட்டு தொடர்புகளில் பயனுள்ள செய்தி கள் கிடைக்கும். எதிர்கால திட்டங்களுக்கு நல்ல பலனை தரும். தொடர்ந்து முயற்சிகளிலிருந்து வருவது நன்மையை தரும்.

பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்

திட்டமிட்டபடி காரியங்கள் சிறப்பாக அமையும். தொழில் செய்யும் போது சிறு இடையூறுகளை எளிமையாக விரட்டி விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம். வெண்மை, பச்சை

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு, கிழக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி. வெள்ளி, புதன்

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு ஒன்பது முறை தொடர்ந்து வழிபாடு செய்து வர கிரக தோசம் நீங்கி நன்மை பெறுவீர்கள்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3