வைகாசி மாதம் கன்னி ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் கன்னி ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

எதையும் பல முறை ஆராய்ச்சி செய்து முடிவு எடுக்கும் குணம் கொண்ட கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு உச்சம் பெற்ற சுக்கிரன் பார்வை பெறுவதும் ஜென்ம குரு திருகோண பார்வையால் சாதகமான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்களின் முயற்சிக்கு சனியின் உதவிகளும் பரிபூரணமாக அமையும்.

பணியாளர்களுக்கு

பணியாளரின் சொந்த கருத்துகளுக்கு துணைபோக மாட்டீர்கள். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்து கொள்வீர்கள். தொழிற்சங்க கருத்துகளை ஏற்பு டையதாக இருந்தால் கடைசி வரை ஆதரவு தருவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பொருளாதாரம் வளம் பெறும்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது நலனில் கவனம் செலுத்துவீர்கள். உங்களின் வாழ்வு தரம் உயர எடுக்கும் காரியங்கள் சிறப்பாக அமையும். பொது விடயங்களின் மனதில்பட்ட விடயங்களை வெளிப்படையாக வெளிபடுத்தி காட்டுவீர்கள். பொருளாதாரத்தின் முன்னேற்றமும், வளமும் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

உங்களின் தொழில் போட்டியை உடனே சரி செய்து கொள்வீர்கள். ஜவுளி, கைவினைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் கைபேசி, மார்பிள் விற்பனையில் கூடுதல் லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தில் சில யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை பலபடுத்திக் கொள்வீர்கள். 

கலைஞர்களுக்கு

கலைதுறையின் நினைத்த இடத்தை தக்க வைத்து கொள்வீர்கள். பாடல், வசனம், இணை இயக்குனர்களுக்கு முன்னேற்றமான காலமாக அமையும்.  தெரிந்த சிலர் உதவிகளை செய்து விட்டு அதனால் துன்பப்பட வேண்டி வரும். கவனமுடன் இருப்பது நல்லது. கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயரும். 

பெண்களுக்கு

பெண்களின் துன்பங்களை கண்டு அவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். பெண்களின் முன்னேற் றத்திற்கு உதவியாக இருப்பீர்கள். சுயதொழிலில் முன்பை விட வளர்ச்சியை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பொருளாதார நிலை வளர்ச்சியை தரும். 

மாணவர்களுக்கு

உயர்கல்வி, வேலைவாய்ப்பு அரசியல், தொழில்நுட்ப கல்வி கணணி கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். சிலருக்கு ஆசிரியரின் உதவி பயனுள்ளதாக அமையும். 

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

23.05.2017 செவ்வாய் அதி காலை 05.12 முதல் 25.05.2017 வியாழன் காலை 08.04 மணி வரை

நட்சத்திர  பலன்கள்

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். முதலீடு இல்லாத தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். உறுதியான முடிவுகளை எடுத்து செயலில் வெற்றியைப் பெறுவீர்கள். 

ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

எதற்கெடுத்தாலும் காரியத்தை தள்ளி போட்டு வந்த உங்களின் நிலை மாறும். எதிர்ப்புகளை சிறப்பாகவும் திறமையாலும் கையாள்வீர்கள்.  பொருளாதாரம் நன்றாக அமையும். 

சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்

விளையாட்டு கலைகளில் ஆர்வம் கொண்டு விளங்குவீர்கள். குடும்ப விழாவில் விட்டு கொடுத்து செல்வது நல்ல பலனை தரும். திறமையால் வாழ்வு அமையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, கிழக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, திங்கள்

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கி நெய்தீபமிடவும். வெள்ளிக்கிழமை சுப்ரமணியரை வணங்கிவர எல்லாம் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையும்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3