வைகாசி மாதம் கடக ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் கடக ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

விரும்பிய வாழ்க்கையும், தொழிலை பற்றி சிந்தனை கொண்டு விளங்கும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு லாபஸ்தானத்தைப் பார்ப்பதும் யோகாதிபதியும் தனாதிபதியும் லாபஸ்தானத்தில் அமர்வதும் பொருளாதாரத்திலும் தொழிலிலும் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும்.

பணியாளர்களுக்கு

பணிபுரியுமிடத்தில் உங்களின் சேவையை பணியாளர்களின் நலனுக்காக செய்வீர்கள். பணியின் முதலிடத்தை பெறுவீர்கள். உறுதியான முடிவுகளை எடுக்கும்போது சிலரிடம் ஆலோசனைகளை பெறுவீர்கள். தொழிற்சங்க பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் வரவேற்பை பெறுவீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது விடயங்களில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு தெரிந்து ஒரு தவறு நடக்க விடாமல் அதை தடுக்க முற்படுவீர்கள். எதிலும் தைரியமுடனும், துணிச்சலுடனும் செயல்படுவீர்கள். பொது மக்களின் குறைகளை களைய, உதவியை செய்து வளப்படுத்துவீர்கள்.

வியாபாரிகளுக்கு

தொழில் ஸ்தானாதிபதி பலம் பெற்று இருப்பதால் தொழிலில் முன்னேற்றமும் கூடுதல் ஆதாயமும் பெறுவீர்கள். எதிலும் தைரியமுடன் செயல்படுவீர்கள். கட்டுமான தொழிலில் வாகன விற்பனைகளில் முன்னேற்றம் காணுவீர்கள். புதிய தொழில் வாய்ப்பு அமையும். வெளிநாடு பயணம் பயனுள்ளதாக அமையும். 

கலைஞர்களுக்கு

கலைத்துறையினர் வாய்ப்புகள் சிறப்பாக அமையும். நிர்வாகம் அலங்காரம் போன்ற கலை துறையின் முன்னேற்றம் பெறுவீர்கள். நடிப்பாற்றலை வெளிபடுத்தி திறமையுடன் செயல்படுவீர்கள். கலைஞர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பீர்கள்.

பெண்களுக்கு

பெண்களின் பொது நலன் கருதி எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் உதவியாக இருப்பீர்கள். சுய தொழிலில் கவனம் செலுத்தி வளம் பெற முயற்சி செய்து வெற்றியை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

மாணவர்களுக்கு

சிவில் சட்டம், ஆராய்ச்சி, மின்சார கல்வி சிறப்பாக அமையும். ஆசிரியரின் போதனைகள் பயனுள்ளதாக அமையும். சக மாணவர்களின் உதவி நன்மையை தரும். 

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

18.05.2017 வியாழன் மாலை 05.24 முதல் 20.05.2017 சனி இரவு 12.52 மணி வரையும்.

14.06.2017 புதன் இரவு 02.11 முதல் 17.06.2017 சனி காலை 08.50 மணி வரையும்.

நட்சத்திர  பலன்கள்

புனர்பூசம் 4ம் பாதம்

கடந்த காலத்தில் இருந்து வந்த நிலைகள் மாறி நல்ல பலனை பெறுவீர்கள். தொழிலில் இருந்து வந்த போட்டி மறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். 

பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதம்

தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு உடன் இருந்து உதவிகளை செய்வீர்கள். சமூகத்தின் நற்பணிகளுக்கு ஆதரவு தருவீர்கள். தொழிற்சங்க பொறுப்புகளை திறம்பட செய்வீர்கள். 

ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

மாணவர்களின் கல்வி மேன்மை பெறும். திருமணமாகி பல வருடம் குழந்தையின்றி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மருத்துவ உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், ஞாயிறு, செவ்வாய்

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய், வெள்ளிகிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் வழிபாடும், சனிக்கிழமை மாலை வேளையில் சிவன் தரிசனமும் உங்களின் வாழ்வில் ஏற்றமான சூழ்நிலையை தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3