வைகாசி மாதம் தனுசு ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் தனுசு ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

தடுமாற்றங்களை கண்டு மனம் மாறாத தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறும் இடங்களும், தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து நிரந்தர தொழிலுக்கு வாய்ப்புகளையும் அதற்கான முயற்சிகளுக்கு நல்லபடி அமைய உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறக்கும்.

பணியாளர்களுக்கு

தொழிற்சங்க பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுவீர் கள். பிறருக்காக விட்டு கொடுத்து வாழ்வீர்கள். புதிய செலவுகள் வந்து பொருளா தாரத்தில் சிரமங்களை தந்து வந்தாலும் எதையும் எளிதில் சரிசெய்து கொள்வீர்கள். போட்டிகளை தவிர்த்து எதார்த்தமாக வாழ வழி வகுத்து கொள்வீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது நலனில் செயல்பாடுகளை காலம் அறிந்து செயல்படுவீர்கள். பொது மக்களின் கருத்துகளை வாங்கி அதற்கு தகுந்தபடி செயலில் இறங்குவீர்கள். மருத்துவ உதவிகளையும் அரசாங்க உதவிகளையும் உடன் இருந்து பெற்று தருவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

வியாபாரிகளுக்கு

உங்களின் தொழில் ஸ்தானாதிபதி பலமாக இருப்பது உங்களின் தொழிலுக்கு பக்கபலமாக அமையும். மருத்துவ உபகரணம், சித்தமருந்துகள், ஜவுளி. ஆயத்த ஆடைகள், தேயிலை, இயற்கை உரம் விற்பனை நன்றாக இருக்கும். வியாபாரிகளின் முயற்சி நல்ல பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். 

கலைஞர்களுக்கு

கலைதுறையினருக்கு வீண் அலைச்சலை குறைக்கும். கலைஞர்களின் நடிப்பாற்றலும், வசனம், பேச்சின் ஆழமான கருத்துகள் அனைவரையும் வசீகரிக்கும், கலைஞர்களின் அன்புக்குரியவராக திகழ்வீர்கள். நடன கலைஞர்களின் திறமை வெளிபடுத்துவீர்கள். பொருளாதாரம் வளம் பெறும்.

பெண்களுக்கு

பெண்களின் செயல்பாடுகளில் உறுதி தன்மை இருக்கும். எதையும் ஸ்திரமுடன் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருந்து வரும். சுயதொழிலில் போட்டிகள் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவு பலப்படும்.

மாணவர்களுக்கு

அரசியல், சட்டம், வங்கி. கணக்கியல் புதிய தொழில்நுட்ப கல்விகளில் சிறந்து விளங்குவீர்கள். ஒருமித்த கல்வியில் கவனமாக படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

29.05.2017 திங்கள் பகல் 01.08 முதல் 31.05.2017 புதன் மாலை 05.04 மணி வரை

நட்சத்திர பலன்கள்

மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

எந்த தொழிலிலும் நிலையில்லாத நிலையில் இருந்து வந்த உங்களுக்கு நிரந்தரமான தொழில் வாய்ப்பு அமையும். தொழிலாளர்களுக்கு வேலை பழுது குறையும். 

பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

பொத விடயங்களில் கலந்து கொள்வீர்கள். கலைதுறையினருக்கு வாய்ப்புகள் அமையும். திறமையை முழுமையாக செயல்படுத்தி வளமான வாழ்வுக்கு வழிவகுத்து கொள்வீர்கள். 

உத்திராடம் 1ம் பாதம்

அரசாங்க காரியங்களில் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். தெரிந்த விடயங்களில் ஆர்வமாக இருப்பீர்கள். 

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள். பச்சை, வெண்மை

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள், புதன்

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை அன்று சிவன் கோவில் சென்று பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெயை தீபமிட்டு வணங்கி வர நன்மை பெறுவீர்கள்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3