குளியலறை / கழிவறைகளில் உப்புக் கிண்ணம்

குளியலறை / கழிவறைகளில் உப்புக் கிண்ணம்

நாம் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் இடம் குளியலறை / கழிவறையாகும். இக்கழிவுகளில் நச்சுக்கிருமிகள், நுண் கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன. எனவே குளியலறை / கழிவறை வீட்டின் எந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை எப்போதும் தீய சக்தியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை / கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும். இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது. உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில் உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.