தியானம் செய்வது எப்படி? - முதற்கட்ட பயிற்சி

தியானம் செய்வது எப்படி? - முதற்கட்ட பயிற்சி

தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும்.

பொதுவாக ஒரு ஒரு நல்ல விஷயத்தை பழகிக்கொடுக்க முயன்றால் அதனால் என்ன பயன்? அது ஒடம்புக்கு நல்லதா? மனசுக்கு நல்லதா? நீடிச்சி இருக்குமா? கண்ணை பாதுகாக்குமா? காதை பாதுகாக்குமா? போன்ற முன்னெச்சரிக்கை கேள்விக்கணைகளை விட்டுக்கொண்டே இருப்பார்கள் நம் மக்கள். ஆனால் அதே மக்கள் பின்விளைவுகள் தெரிந்தும் பல தீய செயல்களில் ஈடுபடத்தானே செய்கிறார்கள். அந்த சமயங்களில் முன்னெச்சரிக்கைகளை அடகு வைத்து விடுவார்கள் போலும்.
தியானத்தால் விளையும் பயன்களை சொல்ல வார்த்தைகள் காணாது. அந்த அளவுக்கு பற்பல அற்புத பலன்களை உடையது. 

தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும். இதற்கு மூன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களே ஆகும். முதல் கட்ட தியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும். நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் பழகுவதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள். காலை மாலை என எப்பொழுதும் தனிமையில் செய்யுங்கள். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மிகவும் நன்று. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர்மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆதலால் மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். அப்படி ஒருவேளை இடையில் போக வேண்டி இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு தியானத்தை முடித்து விடுங்கள். காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். எஜமானுக்கு விசுவாசத்தோடு இருக்கும் நாய் போல உங்கள் மனதோடு எப்போதும் விசுவாசத்தோடு இருங்கள். 

இப்பொழுது நாம் தியானம் செய்வதற்கு தயாராகி விட்டோம். நான் ரெடி நீங்க ரெடி தானே

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!