சொந்த வீடு கட்ட முடியாமல் வசிப்போருக்கு

சொந்த வீடு கட்ட முடியாமல் வசிப்போருக்கு

மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத மூன்று உகாரங்கள் தேவைப்படுகின்றன. அவைகள் உணவு, உடை, உறைவிடம் உறைவிடமென்பது வாழ்நாட்களைக் கழிப்பதற்கு தேவைப்படும் இடம் குருவிக்கு ஒரு கூடு, என்பது போல உணவும், உடையும் பொருள் இருந்தால் அன்றாடத் தேவைக்கு வாங்கி விட முடியும். வாழும் குடியிருக்கும் வீட்டினை அப்படி பெற முடியாது வாடகைக்கு, தன் குடும்பத்தாரின் தேவையயும் கருத்தில் கொண்டு, வீட்டுக்குரியவரின் கேள்வி கணைகளுக்கு ஈடு கொடுத்து, அவர் கேட்கும் பல மாத வாடகைப் பணத்தை முன்பணமாகக் கொடுத்தும் ஒரு வீட்டினை ஏற்பாடு செய்ய இதன் சிரமங்களை அனுபவித்த ஆத்மாக்களுக்குத் தான் புரியவரும். அப்படியே வீட்டுக்குச் சொந்தகாரரின் நிபந்தனைகளை ஏற்று குடி அமர்ந்தாலும் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் சுவற்றில் ஆணி அறையாலும், அங்கே, இங்கே குப்பைகளும் தூசு துப்பைட்டைகளைப் போடாதும் உடம்புக்கு யாராகிலும் பிணி பீடிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வெளியே நடமாடக்கூடாது என்றும் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். வீட்டுக்கார அம்மாவுக்கும் அய்யாவுக்கும் ஜால்ரா போட வேண்டும் அப்பொழுதுதான் நாம் அங்கு குடியிருந்து காலங்கடந்த முடியும். இல்லாவிட்டால் குழந்தை குட்டிகளுடன் எங்கே கூட்டிச் சென்று அல்லாட முடியும்? எனவே மனிதனுக்கு சொந்த வீடு என்பது கனவாகிப்போகாமல் செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலை உண்டு. அவன் தனது குடும்பத்தாகுடன் எந்தக் கரைச்சலுமின்றி நிம்மதியாய் வாழ்க்கையைக் கொண்டு நடத்திட சொந்த வீடு அவரவர் சக்திக்கும் திறனுக்கும் ஏற்ப ஏற்பாடு செய்து கொள்வது என்பது மிகமிக அவசியம். இது ஒவ்வொரு மனிதனின் இலட்சியமும் கூட. உழைக்க வேண்டும், முயற்சிக்க வேண்டும். கிரகங்களும் தெய்வ அனுக் கிரகமும் வேண்டும். தாய், தகப்பன், பின்வரும் சந்ததிகளில் யாருக்காவது நிச்சயம் சொந்த வீடுகட்டி வாழும் பிராப்தத்தை இறைவன் நிச்சயம் கொடுத்திருப்பான். திறனறிந்து செயல்பட்டால் எல்லாம் நல்ல படியால் முடியும்

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!