வைகாசி மாதம் துலாம் ராசிகாரர்களுக்கான பலன்கள்!

வைகாசி மாதம் துலாம் ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!

எத்தனை துன்பங்கள் வந்தாலும் சிறிதும் கவலை படாத துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு பாக்கியாதிபதி புதன் பார்வை பெறுவதும் பாக்கிய ஸ்தானத்தை சந்திரன் பார்ப்பதும் உங்களின் எதிர்கால திட்டங்களுக்கு உறுதுணையாக அமையும். செய்யும் தொழிலில் சில முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். 

பணியாளர்களுக்கு

பணியில் பிறரின் மனம் புண்படாத வகையில் சேவை செய்து வருவீர்கள். உங்களின் விடயங்களில் யாரும் தலையீடு செய்தால் நீங்கள் ஒதுங்கி கொள்வீர்கள். எல்லோரும் வளமுடனும் ஒற்றுமையுடனும் இருப்பதையே விரும்புவீர்கள். தொழிற்சங்க பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு

பொது கருத்துகளில் எல்லோரின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். மருத்துவ உதவிகளையும் சமூக வளர்ச்சிகளிலும் உடன் இருந்து வருவீர்கள். பொது நலனில் பிறருக்காக உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு உதவியாக இருப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபார நோக்கங்கள் நிறைவேறும் வரை உங்களின் உழைப்பு ஓயாமல் இருந்து கொண்டே இருக்கும். கூட்டுத் தொழில் உணவு பொருட்கள், எண்ணெய் வகைகள். குளிர்பானங்களின் விற்பனை அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு உங் களின் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும்.

கலைஞர்களுக்கு

கலைதுறையினர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். எளிதில் நினைத்த காரியத்தை அடைய முயற்சி செய்வீர்கள். உறுதுணையாக எல்லா விடயங்களிலும் இருந்து செயல்படுவீர்கள். கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவீர்கள்.

பெண்களுக்கு

பெண்களின் சுய விளம்பரங்கள் மூலம் வாழ் வில் உன்னத நிலையை அடைவீர்கள். ஆடம்பரம், ஆன்மீகம், கலையில் சிறந்து விளங்குவீர்கள். சுயதொழிலில் கடந்த காலத்தைவிட அதிக முன்னேற்றமும், விற்பனையில் கூடுதல் ஆதாயமும் பெறுவீர்கள். 

மாணவர்களுக்கு

கடந்த காலத்தை காட்டிலும் படித்த கல்வி மூலம் சிறப்பான வளர்ச்சியை பெறுவீர்கள். தேர்வின்போது ஞாபக சக்தி அதிகரித்து மேன்மை அடைவீர்கள்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்

25.05.2017 வியாழன் காலை 08.05 முதல் 27.05.2017 சனி காலை 10.24 மணி வரை

நட்சத்திர பலன்கள்

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்

புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல் விலகி நன்மை பெறுவீர்கள். புதிய நண்பர்களின் நட்பு பயனுள்ளதாக அமையும்.

சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்

வெளிநாட்டு நண்பர்களின் உறவு பலப்படும். உங்களின் செயல்களில் உத்வேகம் இருக்கும். தனித்திறமையுடன் செயல்பட்டு வெற்றியை நோக்கி பயணம் செய்வீர்கள். 

விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த காரணங்களால் விட்டுபோன உறவுகள் மீண்டும் இணையும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, புதன், திங்கள்

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்கிழமைகளில் மாரியம்மன் கோயிலுக்கு சென்று நெய்தீபம் இட்டு வேப்பிலை வைத்து வணங்கிவர தன்பங்களிலிருந்து விடுதலை பெற்று பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!